அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம் பார்பனச்சேரியில் வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1 கோடியே 93 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், வாரணவாசி மல்லூரில் மருதையாறு கோட்டம் நீர்வளஆதாரத்துறையின் சார்பில் ரூ.12 லட்சத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாணிக்கவாசகர் ஓடையில் மதகுகள் புனரமைக்கும் பணி மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணியினையும், நைனேரியில் ரூ.20 லட்சத்தில் ஏரி கரை பலப்படுத்தும் பணி, தூர்வாரும் பணியினையும், வாரணவாசியில் வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1 லட்சத்தில் ரத்தினப்பிள்ளைக் குட்டையில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் வரத்துவாய்க்கால் தூர்வாரும் பணி, கரைகள் பலப்படுத்தும் பணியினையும் அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சரவணவேல்ராஜ், கலெக்டர் வினய் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கண்காணிப்பு அதிகாரி கடந்த 14-ந் தேதி முதல்- அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட அரியலூர் புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இதையடுத்து அவர் கீழப்பழூரில் வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையினையும், ரூ.5 லட்சத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கருங்குளம் ஏரி தூர்வாரும் பணியினையும், அம்பாபூரில் ரூ.5 லட்சத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் செம்பட்டையான் ஏரி தூர்வாரும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பார்வையிட்டார். அப்போது திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சித்துறை) சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் (பொது பணித்துறை) தட்சணாமூர்த்தி, துணை இயக்குனர் (கனிமங்கள்) சரவணன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story