பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுனர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 30 Aug 2019 4:30 AM IST (Updated: 30 Aug 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மருந் தாளுனர் சங்கத் தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

கரூர்,

கரூர் மண்டல தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதற்கு கரூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் செல்வம் (நாமக்கல்), கவுதமன் (திருப்பூர்) மற்றும் கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினர் களாக மாநில தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினர். இதில் கரூர், திருச்சி, கோவை நகர், புறநகர் மற்றும் திருப்பூர், நாமக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த மருந்தாளுனர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பதவி உயர்வு வழங்க வேண்டும்

காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பதவி உயர்வு தேக்க நிலையினை போக்கிட மருந்தாளுனர்களுக்கு கூடுதலாக மருந்தக கண்காணிப் பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குனர் (மருந் தியல்) பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். தலைமை மருந்தாளுனர், மருந்து கிடங்கு அலுவலர் ஊதிய முரண் பாடுகளை களைந்து முறையே தர ஊதியம் ரூ.5,400, ரூ.6 ஆயிரம் மருத்துவத்துறை குழு பரிந்துரைப்படி புதிய ஊதிய விகிதத்தில் நிர்ணயம் செய்திட வேண்டும்.

காசநோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுனர் களுக்கு மற்ற பிரிவினருக்கு வழங்குவதுபோல் ஒரு மாத கட்டாய விடுப்பு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை மாநில செயலாளர் சகாதேவன் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். 

Next Story