அனுமதி இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்த தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் - தென்காசி கோர்ட்டு தீர்ப்பு


அனுமதி இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்த தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் - தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 3:45 AM IST (Updated: 30 Aug 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

அரசு அனுமதி இல்லாமல் வெடி பொருட்கள் வைத்திருந்த தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தென்காசி,

சேர்ந்தமரம் போலீசார் கடந்த 25-9-2010 அன்று சேர்ந்தமரம் அருகில் உள்ள கரடிகுளம் இந்திரா காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் வெடிபொருட்களை வைத்து பாறைகளை உடைக்க குழி தோண்டிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்ததில், அருணாசலம் என்பவர் பிடிபட்டார்.அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி கடையநல்லூர் அருகே உள்ள வலசையை சேர்ந்த மாடசாமி மகன் செல்லத்துரை (வயது 40), சேர்ந்தமரம் அருகே உள்ள கரடிகுளத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் ராசு (38) ஆகியோருடன் அரசு அனுமதி இல்லாமல் வெடிபொருட்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ட்டெனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அருணாசலம் இறந்துவிட்டார்.

இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தென்காசி கூடுதல் அமர்வு நீதிபதி ரஸ்கின் ராஜ் விசாரித்து செல்லத்துரை, ராசு ஆகியோருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார். இதில் செல்லத்துரை தற்போது கடையநல்லூர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக உள்ளார்.

Next Story