திருவண்ணாமலையில், மர்ம காய்ச்சல்; 2 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
திருவண்ணாமலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 மாணவர்கள் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை புது தெரு பகுதியை சேர்ந்தவர் குமார். அவருடைய மகன் சதீஷ் (வயது 16), 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் சிவா, 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவர், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது ரத்த மாதிரியும் பரிசோதனைக்காக எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) ஷகீல்அகமது கூறுகையில், காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள 2 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர். எந்தவித பாதிப்பும் இல்லை.
மேலும் அவர்களுடைய ரத்த பரிசோதனை அறிக்கை வந்த பிறகே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனரா? என்பது தெரியவரும். பின்னர் அதற்கு ஏற்ப அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்’ என்றார்.
புது தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் மர்ம காய்ச்சலால் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 2 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலும், ஒருவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். எனவே, சுகாதார துறையினர் மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story