வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நிவாரண பொருட்கள்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 30 Aug 2019 3:27 AM IST (Updated: 30 Aug 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

சாங்கிலி, கோலாப்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மராட்டிய மாநில ரஜினி ரசிகர் நற்பணி மன்றம், நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தது.

மும்பை,

மராட்டியத்தில் சமீபத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சாங்கிலி மாவட்டத்தில் உள்ள மராத்வாடி, அரலா, சோனாவாடே மற்றும் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பானுன்ரேவருண், சித்தூர்வருண், சோண்டோலி ஆகிய கிராமங்களில் சுமார் 500 குடும்பங்களுக்கு மராட்டிய மாநில தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் செலவில், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய், சோப்பு, சர்க்கரை, மசாலா சாமான்கள் போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மன்ற மாநில தலைவர் எஸ்.கே. ஆதிமூலம், செயலாளர் சிவகுமார் ராமச்சந்திரன் ஆகியோர் மன்ற கொடியை அசைத்து நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் லாரியை வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை செயலாளர் மரியசிலுவை, இணை செயலா ளர்கள் சதீஷ் ராம்ராஜ், நம்பிராஜன், கலியமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், ரஜினி, தனவேல் மற்றும் மூர்த்தி, அமோல் போஸ்லே, சஞ்சய் உட்டேக்கர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story