50 ஆயிரம் பேருக்கு வேலை என்பது வண்டி இழுக்கும் குதிரைக்கு கேரட்டை காட்டுவது போன்றது பாஸ்கர் எம்.எல்.ஏ. சொல்கிறார்
பெரிய நிறுவனம் எதுவும் தொடங்கப்படாத நிலையில் 50 ஆயிரம் பேருக்கு வேலை என்பது வண்டி இழுக்கும் குதிரைக்கு கேரட்டை காட்டுவது போன்றது என்று பாஸ்கர் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
பாஸ்கர் (அ.தி.மு.க.): கவர்னர் உரை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏழைகளின் பசியை போக்கிட இலவச அரிசி வழங்கப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் போடப்படவில்லை. புதிய தொழிற்சாலைகள் வராததால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதுபோன்ற நிலையில் தனிநபர் வருமானம் எப்படி உயர்ந்து இருக்கும்?
10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் மதிப்பெண் குறைவாக இருந்தால் அதே அரசுப் பள்ளியில் படிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதை முதலில் சரிசெய்யுங்கள். அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இல்லை. புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்ட பெரிய நிறுவனம் எதுவும் இதுவரை தொடங்கப்படாத நிலையில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு, 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது வண்டி இழுக்கும் குதிரைக்கு கேரட்டை காட்டுவது போன்றது.
செல்வகணபதி (பா.ஜனதா): கவர்னர் புதுவை அரசை பாராட்டினார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இனிமேலாவது மக்களுக்கு தேவையானதை நாம் பூர்த்தி செய்யவேண்டும். விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்கள் உள்ளது.
ஆனால் விவசாய நிலம் எல்லாம் பிளாட் போடப்பட்டுள்ளது. அந்த மனைகளை வாங்கியவர்கள் யாரும் வீடுகட்டவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தேவைக்கு அதிகமாகவும் மனைகள் உள்ளன. இனிமேலும் பிளாட்டுகள் போடுவதை தடுக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை புதுவை மாணவர்களுக்கு பெற்றுத்தரவேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களிலும் புதுச்சேரி மாணவர்களை சேர்க்கவேண்டும். சென்டாக்கில் ஆன்லைன் விண்ணப்பம் என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
தீப்பாய்ந்தான் (காங்): நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு உள்ளது. தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் மீது அரசு அதிக அக்கறை காட்டியுள்ளது. கால்நடை பராமரிப்புக்கு உரிய மருத்துவ வசதி செய்துதர வேண்டும்.
பிள்ளையார்குப்பத்தில் கால்நடை மருத்துவமனை உருவாக்கித்தர வேண்டும். இலவச அரிசியை தொடர்ந்து வழங்கவேண்டும். சிவப்பு ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதை காலத்தோடு மாற்றித்தர வேண்டும். ஜிப்மர் உறுப்புமாற்று சிகிச்சைமையம் பெரும் பயனளிக்கும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது பாராட்டத்தக்கது.
பத்துக்கண்ணு பகுதியில் தவறுகள் நடக்கின்றன. அதை தடுக்க அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும். அதேபோல் குரும்பாபேட் பகுதியில் போலீஸ் பூத் அமைக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அரிசியை வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்ந்துள்ளதாக கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்களுக்கான வசதிகள் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. இளைஞர் சமுதாயத்தினர்தான் அதிக அளவு வருகின்றனரே தவிர குடும்பத்துடன் பொதுமக்கள் சுற்றுலா வரும் வகையில் திட்டங்கள் எதுவும் இல்லை. கவர்னர் உரை முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களையே கொண்டுள்ளது என்பதுதான் உண்மை.
செல்வகணபதி (பா.ஜனதா): கவர்னர் புதுவை அரசை பாராட்டினார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இனிமேலாவது மக்களுக்கு தேவையானதை நாம் பூர்த்தி செய்யவேண்டும். விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்கள் உள்ளது.
ஆனால் விவசாய நிலம் எல்லாம் பிளாட் போடப்பட்டுள்ளது. அந்த மனைகளை வாங்கியவர்கள் யாரும் வீடுகட்டவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தேவைக்கு அதிகமாகவும் மனைகள் உள்ளன. இனிமேலும் பிளாட்டுகள் போடுவதை தடுக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை புதுவை மாணவர்களுக்கு பெற்றுத்தரவேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களிலும் புதுச்சேரி மாணவர்களை சேர்க்கவேண்டும். சென்டாக்கில் ஆன்லைன் விண்ணப்பம் என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
தீப்பாய்ந்தான் (காங்): நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் அரசு சிறப்பாக செயல்பட்டு உள்ளது. தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் மீது அரசு அதிக அக்கறை காட்டியுள்ளது. கால்நடை பராமரிப்புக்கு உரிய மருத்துவ வசதி செய்துதர வேண்டும்.
பிள்ளையார்குப்பத்தில் கால்நடை மருத்துவமனை உருவாக்கித்தர வேண்டும். இலவச அரிசியை தொடர்ந்து வழங்கவேண்டும். சிவப்பு ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதை காலத்தோடு மாற்றித்தர வேண்டும். ஜிப்மர் உறுப்புமாற்று சிகிச்சைமையம் பெரும் பயனளிக்கும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது பாராட்டத்தக்கது.
பத்துக்கண்ணு பகுதியில் தவறுகள் நடக்கின்றன. அதை தடுக்க அங்கு புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டும். அதேபோல் குரும்பாபேட் பகுதியில் போலீஸ் பூத் அமைக்கவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அரிசியை வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story