ஜெர்மனியில் உடன் வேலை செய்யும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு மனைவியை கொடுமைப்படுத்திய பேராசிரியருக்கு வலைவீச்சு
ஜெர்மனியில் உடன் வேலை செய்யும் பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் மனைவியை கொடுமைப்படுத்தி சென்னைக்கு அனுப்பிய பேராசிரியரை மாமல்லபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், கல்பாக்கம் அணுபுரத்தை சேர்ந்தவர் கவுசிக் பரசுராமன் (வயது 32). ஜெர்மனியில் தனியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக உள்ளார்.
கவுசிக்பரசுராமன் சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணை கடந்த 22.8.2016 அன்று திருமணம் செய்து கொண்டார். கவுசிக்பரசுராமனுக்கு கல்யாண சீர்வரிசையாக 10 கிலோ வெள்ளி, ½ கிலோ தங்கம் கொடுக்கப்பட்டது. பின்பு அவர் தன்னுடன் ஜெர்மன் அழைத்துச் சென்றார்.
அங்கு கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜெர்மனியில் கவுசிக் பரசுராமனுக்கு உடன் வேலை செய்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் மனைவியை கொடுமைப்படுத்தி விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவிட்டார். சென்னை மாம்பலத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.
கணவர் ஜெர்மனியில் தன்னை துன்புறுத்தியது குறித்து அந்த பெண் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வருமாறு ஜெர்மனியில் உள்ள கவுசிக் பரசுராமனுக்கு விரைவு தபால் மூலம் சம்மன் அனுப்பினார்.
விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்த கவுசிக்பரசுராமன், கல்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வந்து தங்கினார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற அந்த பெண், கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தனது வாழ்கைக்கு நியாயம் கேட்டார். அங்கு அவரை கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தான் தாக்கப்பட்டதாக அந்த பெண் மாமல்லபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கவுசிக்பரசுராமன், அவரது தந்தை, தாய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story