வில்லிவாக்கத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் சாலை மறியல் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்
அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி வில்லிவாக்கத்தில், ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்குன்றம்,
சென்னை வில்லிவாக்கம் சுரங்கப்பாதை அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி, சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
இந்த விடுதியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவும் சரியில்லை. மேலும் விடுதியும் சுகாதாரமாக இல்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி விடுதி வார்டனிடம் புகார் செய்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆதி திராவிடர் நல விடுதி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு குடிநீர், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நேற்று காலை வில்லிவாக்கத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், விடுதியில் தங்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்கப்பட்ட சோறு மற்றும் தண்ணீர் போல் வழங்கப்படுவதாக 2 வாளிகளில் சாம்பாரையும் கொண்டுவந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொளத்தூர்-வில்லிவாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ராஜமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story