பெரியநாயக்கன்பாளையத்தில், டாக்டர் மனைவி உள்பட 2 பேரை கத்தியால் குத்திய பெயிண்டர் கைது


பெரியநாயக்கன்பாளையத்தில், டாக்டர் மனைவி உள்பட 2 பேரை கத்தியால் குத்திய பெயிண்டர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2019 4:15 AM IST (Updated: 31 Aug 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

பெரியநாயக்கன்பாளையத்தில் டாக்டர் மனைவி உள்பட 2 பேரை கத்தியால் குத்திய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

இடிகரை,

கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் உள்ளஅரசு பொதுமருத்துவமனையின் தலைமை டாக்டராக இருப்பவர் சேரலாதன். இவரதுமனைவி சுமதிஎன்கிற பூம்பாவை (வயது 50). இவரது வீடு பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளஆர்.கே.நகரில்உள்ளது. நேற்று மாலை 6மணியளவில்பூம்பாவை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சைக்கிளில் அந்த வழியாக வந்தமர்மநபர்வீட்டின்கேட்டைத்தாண்டிஉள்ளே புகுந்துகாலிங் பெல்லைஅடித்தார்.

இதனைதொடர்ந்து பூம்பாவைகதவைத்திறந்துவெளியே வந்தபோது அந்தமர்மநபர்தான் மறைத்து வைத்திருந்த கத்தியால்அவரை குத்தமுயன்றார்.பூம்பாவை கத்தியைஒருகையால்பிடித்து கொண்டு கூச்சலிட்டார். இதையடுத்து அந்த நபர் பூம்பாவையின்வாயை கையால்பொத்தியபடி கீழேதள்ளிவிட்டார். இதில் பூம்பாவைக்குலேசாக கத்திக்குத்துவிழுந்தது.

அப்போது அந்த வழியாக வந்த பால்காரர் கணேசன், டாக்டரின் மனைவியின் அலறல்சத்தத்தை கேட்டுஅவரைக்காப்பாற்றமுயன்றார். அப்போது பூம்பாவையை விட்டுவிட்டு அந்த நபர்கணேசனை கத்தியால்குத்தினார். இதில்கணேசனுக்கு கையில்காயம் ஏற்பட்டது.இந்தநிலையில்அங்கு வந்தபொதுமக்கள்அந்தநபரை பிடிக்க முயன்றனர்.அப்போது அவர் பொதுமக்களையும் கத்தியைக் காட்டிமிரட்டியபடி தப்பிக்கமுயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்தநபரை பிடித்துசரமாரியாக தாக்கினார்கள்.

இதுகுறித்ததகவலின்பேரில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில்சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முகமது, பார்த்திபன்ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று அந்தஆசாமியை கைதுசெய்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம்வத்தலகுண்டுவைசேர்ந்த லட்சுமணன் (50) என்பதும், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யூனியன் டேங்க் பகுதியில் குடும்பத்துடன்தங்கி பெயிண்டிங்வேலை செய்துவந்ததும் தெரியவந்தது.

கத்திக்குத்து சம்பவத்தில்காயமடைந்த பூம்பாவை மற்றும் பால்காரர் கணேசன்ஆகியோர் தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.இந்த சம்பவம்காரணமாகஅப்பகுதியில்சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story