சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 31 Aug 2019 3:45 AM IST (Updated: 31 Aug 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த விளார்பைபாஸ் அருகே வெட்டிக்காடு பிரிவு சாலையில் கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி அன்று இரவு 16 வயதான சிறுமி தனது ஆண் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக மினிலாரியில் சென்ற 6 பேர் கும்பல் தனிமையில் பேசிக்கொண்டிருந்த அவர்களை பார்த்தனர். உடனே லாரியை நிறுத்திவிட்டு அவர்கள் அருகில் சென்ற அந்த கும்பல் அந்த வாலிபரை அடித்து விரட்டினர்.

பின்னர் அந்த சிறுமியை கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விளார் பைபாஸ் பகுதியை சேர்ந்த முனியப்பனின் மகன்களான கார்த்திக்(வயது 22), இளவரசன் (20) உள்பட 6 பேரை கைது செய்து தஞ்சாவூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்கள் கார்த்திக், இளவரசனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜராகி வாதாடினார். 

Next Story