உறவினர் கட்சி தாவல் குறித்த கேள்விக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கோபம் அடைந்த சரத்பவார்
முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாவி வருகின்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனாவுக்கு தாவி வருகின்றனர். தொடர் கட்சி தாவல் எதிர்க்கட்சியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி பதம்சிங் பாட்டீலும் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் உறவினர் ஆவார்.
இந்தநிலையில் நேற்று அகமத்நகரில் சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, கட்சி தாவிய பதம்சிங் பாட்டீல் உங்கள் உறவினர் ஆயிற்றே என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறிய ‘உறவினர்’ என்ற வார்த்தை சரத்பவாருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “இங்கே உறவினர் என்ற கேள்வி எதற்காக வந்தது? நீங்கள் கூறியது தவறானது. அரசியலில் உறவினர் என்ற கேள்விக்கு எங்கே இடமிருக்கிறது? என காட்டமாக கூறினார். நாகரிகம் இல்லாதவர்களை பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைக்கக்கூடாது என்றும் கூறினார். சம்பந்தப்பட்ட நிருபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
பின்னர் இருகரம் கூப்பி உங்கள் (நிருபர்கள்) கேள்விகளுக்கு என்னால் தொடர்ந்து பதிலளிக்க முடியாது என்று கூறிய சரத்பவார், அங்கிருந்து வெளியேற முயன்றார். இதையடுத்து மற்ற நிருபர்களின் தொடர் சமரசத்தால் அவர் மீண்டும் கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கினார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் சரத்பவார் பொறுமை இழந்தது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story