சிவசேனாவின் நம்பிக்கையை பெற்று நாராயண் ரானேயை கட்சியில் சேர்ப்போம் முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறுகிறார்


சிவசேனாவின் நம்பிக்கையை பெற்று நாராயண் ரானேயை கட்சியில் சேர்ப்போம் முதல்-மந்திரி  பட்னாவிஸ் கூறுகிறார்
x
தினத்தந்தி 31 Aug 2019 4:40 AM IST (Updated: 31 Aug 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

சிவசேனாவின் நம்பிக்கையை பெற்று நாராயண் ரானேயை கட்சியில் சேர்ப்போம் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணையப்போவதாக சுவாபிமான் கட்சி தலைவர் நாராயண் ரானே அறிவித்து உள்ளார். இது சிவசேனா மற்றும் பா.ஜனதா இடையே மோதலை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாராயண் ரானே அவரின் கட்சியை பா.ஜனதாவுடன் இணைக்க விரும்புகிறார். இதுகுறித்து நாங்கள் ஆலோசிப்போம். ஆனால் அதற்குமுன்பு சிவசேனா கட்சியின் நம்பிக்கையை பெறுவோம். இந்த விஷயத்தில் சிவசேனாவிடம் கலந்து ஆலோசிக்காமல் பா.ஜனதா தன்னிச்சையாக முடிவெடுக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நாராயண ரானே சிவசேனாவில் இருந்து வெளியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story