ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியத்துடன் கடன் - கலெக்டர் தகவல்
விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ஆதிதிராவிடர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளஆதிதிராவிடர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையாக அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் இருப்பிடச் சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story