சிவகாசி அருகே 3 பெண்களை திருமணம் செய்தவர் மர்ம சாவு வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
சிவகாசி அருகே 3 பெண்களை திருமணம் செய்தவர் மர்மமான முறையில் வீட்டுக்குள் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் முத்துசுந்தரமூர்த்தி (வயது 48). இவர் அதே பகுதியில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு சரஸ்வதி, லதா, மீனா ஆகிய 3 மனைவிகள். இந்த நிலையில் முத்துசுந்தரமூர்த்தியின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் 3–வது மனைவி மீனா தங்கி இருந்தார்.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முத்துசுந்தரமூர்த்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்துள்ளார். தனது செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். பணத்துக்கான ஏற்பாடுகளை மீனா செய்து விட்டு அதற்கான தகவலை செல்போன் மூலம் சொல்ல முயன்றபோது முத்துசுந்தரமூர்த்தி செல்போனை எடுத்து பேசவில்லை என்று கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து மீனா சிவகாசிக்கு வந்துள்ளார். அப்போது முத்துசுந்தரமூர்த்தி, சித்தராஜபுரத்தில் உள்ள மீனாவின் வீட்டில் படுத்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல் அழுகி துர்நாற்றம் வீசி உள்ளது.
இதுகுறித்து உடனே சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்துசுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மர்ம சாவு குறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story