பல்லடம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது: நெருங்கி பழகிய சிறுவன் கைது


பல்லடம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது: நெருங்கி பழகிய சிறுவன் கைது
x
தினத்தந்தி 1 Sept 2019 4:45 AM IST (Updated: 31 Aug 2019 9:58 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் சிறுவனுடன் நெருங்கி பழகிய பிளஸ்-2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும் அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவன் ஒருவனுக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த பழக்கம் அவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அந்த மாணவன் கடந்த ஆண்டின் பாதியிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டான். ஆனாலும் அந்த மாணவியுடனான தொடர்பை விடவில்லை. இதற்கிடையில் மாணவியின் பெற்றோர் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விடுவதால், அந்த மாணவியின் வீ்ட்டிற்கு அந்த சிறுவன் சென்று வந்தான். அப்போது அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

இதனால் மாணவியின் வயிறு பெரிதானது. ஆனால் அதை வெளியில் காட்டாமல் வழக்கம்போல் அந்த மாணவி பள்ளிக்கு சென்று வந்தாள். இந்த நிலையில் அந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய பெற்றோர் அந்த மாணவியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அந்த மாணவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதற்கு யார் காரணம்? என்று கேட்டுள்ளனர். அப்போது அந்த மாணவி, தானும், தனது பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த 17 வயது மாணவனும், நெருங்கி பழகியதாக கூறினார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். இதற்கிடையில் மாணவியும், அவருக்கு பிறந்த குழந்தையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர். பல்லடத்தில் பள்ளிக்கு சென்று வந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story