ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டத்திற்கு அழைக்காத விவகாரம்: ‘மத்திய அரசிடம் புகார் தெரிவிப்பேன்’ - திருப்பூரில் சுப்பராயன் எம்.பி. பேட்டி
திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட கூட்டத்திற்கு என்னை அழைக்காதது பற்றிய விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் புகார் தெரிவிப்பேன் என்று திருப்பூரில் சுப்பராயன் எம்.பி. கூறினார்.
திருப்பூர்,
திருப்பூர் தொழில் நகரம் என்பதால் வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் ரெயில் நிலையத்தில் வந்து செல்கின்றனர். இதனால் திருப்பூர் ரெயில்நிலையம் எப்போதும் பரபரப்புடனேயே காணப்படும். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் சுப்பராயன் எம்.பி. நேற்று காலை ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவர் ரெயில் நிலையத்தில் நடைமேடைகள், பயணிகள் ஓய்வு அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். மேலும், பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது ரெயில் நிலைய முதல் மற்றும் 2-ம் நடைமேடையில் உள்ள கழிவறைகள் மூடப்பட்டிருந்ததை பார்த்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் கழிவறைகள் பூட்டப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உடனடியாக இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கு ரெயிலுக்காக காத்திருந்த பயணிகளிடமும் குறைகள் குறித்து கேட்டறிந்தார். நடைமேடைகளில் உள்ள தின்பண்டங்கள் விற்பனை கடைகளிலும் தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
இந்தியாவிலேயே குறிப்பிடத்தக்க ஒரு வர்த்தக சந்தையாக திருப்பூர் உள்ளது. ஆனால் முக்கிய ரெயில் நிலையமாக திருப்பூர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கானோர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வருகின்றனர். ஆனால் இங்கு கழிவறை வசதிகளே இல்லை. ரெயில் நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது. மொழி தெரியாமல் இங்கு வருகிறவர்களுக்கு காலை கடன்களை முடிக்க கூட எந்த வசதிகளும் இல்லாமல் இருக்கிறது. நடைமேடையில் போதிய அளவிலான கழிவறைகளை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
வருகிற 9-ந்தேதி மேற்கு மண்டலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் சென்னையில் நடக்கிறது. அதில் திருப்பூர் ரெயில் நிலையத்தின் தேவைகள் என்ன என்பது குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்படும். கிட்டத்தட்ட 8 ரெயில்கள் திருப்பூரில் நின்று செல்வதில்லை. நிற்கும் ரெயில்களும் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்கிறது. குறைந்தது 5 நிமிடங்களாவது நின்று செல்ல வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம். மிகப்பெரிய தொழில் நகரமான திருப்பூரில் ரெயில்கள் நிற்காமல் செல்வதை ஏற்க முடியாது.
இதுகுறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசு, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.பி. என்ற முறையில் கூட என்னை அழைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசு மற்றும் நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகார் கொடுக்க உள்ளேன்.
இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் ஏதோ முறைகேடுகள் நடைபெறுவது தெரிந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே என்னை அழைக்காமல் இருப்பது போன்று தோன்றுகிறது. இந்த பணிகள் குறித்த விரிவான விவரங்களும், அதற்காக செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்தும் தகவல் சேகரிக்க உள்ளேன். இந்த விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசிடம் புகார் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள, சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுப்பராயன் எம்.பி.யை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், ரெயில்நிலைய கூட்செட் பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படாமலே இருந்து வருகிறது. கழிவறை வசதிகள் இல்லாததால் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதுமட்டுமின்றி எங்களுக்கான ஓய்வு அறையும் இல்லை.
சரக்கு முனையம் முழுவதும் தரைத்தளம் அமைக்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை முன்வைத்திருந்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உடனடியாக சரக்கு முனையத்தில் தரைத்தளம் அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், கழிவறை வசதி, ஓய்வு அறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது ரெயில்வே துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

Related Tags :
Next Story