விசா வாங்கி தருவதாக பணம் மோசடி: தட்டிக்கேட்ட 3 வாலிபர்களை காரில் கடத்தி கொலை மிரட்டல் - தாய்-மகன் கைது
படிப்பு சம்பந்தமாக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு விசா வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மற்றும் அவருடைய நண்பர்கள் என 3 பேரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகனை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 34). இவர், தனது நண்பர்களான மிதின் தம்பா, ஜெயராஜ் ஆகியோருடன் சேர்ந்து, படிப்பு சம்பந்தமாக மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மோகனசுந்தரமும், அவரது நண்பர்களும் வெளிநாடு செல்லும் சில மாணவர்களுக்கு விசா எடுப்பதற்காக குரோம்பேட்டையை சேர்ந்த மலர்விழி (59) என்பவரிடம் மாணவர்களின் கல்விச்சான்றிதழ் மற்றும் பணத்தை கொடுத்தனர்.
ஆனால் சில மாணவர்களுக்கு மட்டும் விசா எடுத்து கொடுத்துவிட்டு, பல மாணவர்களுக்கு விசா எடுத்து கொடுக்காமல் அவர் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.
இதுபற்றி மலர்விழியிடம் மோகனசுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர், சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள உறவினர் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி மோகனசுந்தரமும், அவரது 2 நண்பர்களும் அங்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த சிலர், மோகனசுந்தரம் மற்றும் அவருடைய நண்பர்கள் என 3 பேரையும் காரில் கடத்திச்சென்றனர். அசோக்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களை அடைத்து வைத்தனர். அங்கு அவர்களை மிரட்டி வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கியதுடன், செல்போன்களையும் பறித்துக்கொண்டு இதுபற்றி வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து மலர்விழி, அவருடைய மகன் சிபி (29) இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், மோகனசுந்தரம் மற்றும் அவருடைய நண்பர்களை கடத்திச்சென்று கொலை மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து தாய்-மகன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story