இந்தியாவில் முதல் முறையாக நடந்தது சென்னையில், சர்வதேச பல் மருத்துவ மாநாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் நடந்த சர்வதேச பல் மருத்துவ மாநாட்டை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
சென்னை,
உலக பல் மருத்துவ கவுன்சில் சார்பில் சர்வதேச அளவில் பல் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சர்வதேச பல் மருத்துவ மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சர்வதேச பல் மருத்துவ மாநாடு இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் ஏற்கனவே 3 முறை நடந்திருக்கிறது. 4-வது சர்வதேச பல் மருத்துவ மாநாடு-கண்காட்சி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாநாடு-கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவரும், முகக்குறைபாடு, உதடு அண்ண பிளவு மற்றும் பேச்சு குறைபாட்டுக்கான அறுவை சிகிச்சைக்கான சர்வதேச ஆலோசகருமான டாக்டர் எஸ்.எம்.பாலாஜி, 3½ லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்த பாட்னாவை சேர்ந்த புகழ் பெற்ற பல் டாக்டர் சொவேந்து ஜா, புதிய தொழில்நுட்பத்தில் செயற்கை பல் பொருத்தும் சிகிச்சையில் 200 டாக்டர்களுக்கு பயிற்சி அளித்த வடக்கன்குளத்தை சேர்ந்த டாக்டர் ஜான்சன் ராஜா, அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டே சமுதாய பல் சேவைகள் மற்றும் வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டு வரும் டாக்டர் சாஜித் உசேன் உள்பட டாக்டர்களுக்கு சிறந்த மருத்துவ பணியை அங்கீகரித்து பல் சிகிச்சை தலைமை பண்புகளுக்கான விருதுகளை வழங்கி பன்வாரிலால் புரோகித் கவுரவித்தார்.
மாநாட்டில் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-
நாட்டிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக பல் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். அதேபோல பொது சுகாதார சட்டமும் தமிழகத்தில் தான் முதலாவதாக அமல்படுத்தப்பட்டது. சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையும், அரசு கண் மருத்துவமனையும் ஆசியாவிலேயே மிகவும் பழமையானதாகும். தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனைகள் நிறுவுவதில் தனியாருடைய பங்களிப்பு சிறப்பாக உள்ளது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளின் தொடர்பு சிறப்பாக உள்ளது.
நோய்களை கண்டறிந்து, அதற்கு சிறப்பான சிகிச்சைகளை அளிப்பதில் உலகின் கிழக்கு பகுதியில் சிறப்பான இடமான தமிழகம் விளங்குகிறது. உலக சுகாதார நிறுவனம் 7,500 பேருக்கு ஒரு பல் டாக்டர் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியாவில் சுமார் 300 பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் நகர்ப்புறங்களிலேயே தங்களுடைய வாழ்க்கையை தொடருகிறார்கள். இதனால் இந்தியாவில் நகர்ப்புறத்தில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு பல் டாக்டரும், கிராமப்புறங்களில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஒரு பல் டாக்டரும் இருக்கிறார்கள்.
இதுபோன்ற மாநாடுகள் பல் மருத்துவம் படிப்பதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் உலக பல் மருத்துவ கவுன்சில் தலைவர் டாக் டர் சாருலதா, கிரேவிடன் இன்டர்நேஷனல் அமைப்பின் இயக்குனர் பி.பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story