சிறப்பு கிராம சபை கூட்டம்
அரியலூர் மாவட்டம், உஞ்சினி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், உஞ்சினி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த 2018-19 ஆண்டு 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதில் உள்ள குறைகள் முன் வைக்கப்பட்டது. கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சமூக தணிக்கை விபரங்களை சமூக தணிக்கை அதிகாரி வில்லியம் கூட்டத்தில் தாக்கல் செய்து விவாதித்தார். தொடர்ந்து குறைகளை கண்டறிந்து அதற்குரிய தீர்வும் காணப்பட்டது. மேலும் முறைகேடு சம்பந்தமாக கிராமசபையில் விளக்கம் கோரப்பட்டது. இதில் உதவி வேளாண்மை அலுவலர் ராஜா கலந்து கொண்டு பிரதமரின் ஓய்வூதிய திட்டம் குறித்து விவசாயிகளிடம் விளக்கம் அளித்தார். மேலும் 18 முதல் 40 வயது உடைய ஒவ்வொரு விவசாயியும் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டத்திற்கு நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். தற்காலிக எழுத்தராக தேவி நியமனம் செய்யப்பட்டு தீர்மானங்கள் எழுதப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story