மும்பையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


மும்பையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2019 10:45 PM GMT (Updated: 31 Aug 2019 7:46 PM GMT)

மும்பையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடக்கத்தில் மும்பை, தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கிய பேய்மழை பின்னர் மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு திரும்பியது.

சாங்கிலி, சத்தாரா, கோலாப்பூர், புனே மாவட்டங்களை கனமழை புரட்டி எடுத்தது. அந்த மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி நிலைகுலைந்தன. இதில் சாங்கிலி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

மழையால் மும்பை-புனே வழித்தடத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நீண்ட தூர ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் மழையின் தீவிரம் குறைந்தது. கடந்த 20 நாட்களாக பெரியளவில் மழை பெய்யவில்லை. நேற்று மும்பையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை, தானே, பால்கர், ராய்காட் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Next Story