குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடைவரை தண்ணீர் செல்கிறது அமைச்சர் பேட்டி
குடிமராமத்து திட்டத்தின்கீழ் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் கடைமடைவரை தண்ணீர் செல்கிறது என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் காதப்பாறை, ஆத்தூர், அரவக்குறிச்சி வட்டம் இனுங்கனூர்் ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 30 ஆண்டுகள் தூர்வரப்படாத வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் இன்று கடைமடை வரை தண்ணீர் விரைவாக செல்கிறது. பெரியவடுகப்பட்டியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நூலகம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் உள்ள குளம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட உள்ளது. ராமேஸ்வரப்பட்டியில் உள்ள நீர் சேகரிப்பு தொட்டியிலிருந்து 9.50 கி.மீ. தூரம் ரூ.3½ கோடி மதிப்பில் குழாய்கள் அமைத்து காதப்பாறை ஊராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக 4 ஊராட்சி ஒன்றியங்களில் 200 நபர்களுக்கு முதல் கட்டமாக கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. எனவே இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
கால்நடை மருந்தகம் திறப்பு
முன்னதாக அரவக்குறிச்சி ஒன்றியம் இனுங்கனூரில் ரூ.31½ லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை பயன்பாட்டிற் காக அமைச்சர் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கரூர் ஊராட்சி ஒன்றியம் கடம்பங்குறிச்சி மற்றும் நன்னியூர் ஆகிய பகுதியில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story