கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டப 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் அனுமந்தராவ், மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை அலுவலக செயலாளர் ரகுநாதன் நாயர் ஆகியோர் நேற்று, விவேகானந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவு சின்னத்தின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘ஒரே பாரதம், வெற்றி பாரதம்’ என்ற பெயரில் பொன்விழா கொண்டாட்டம் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத அணியினர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை சந்திக்கிறார்கள். அப்போது, ஜனாதிபதி பொன்விழா கொண்டாட்ட நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
அதற்கு பிறகு அவர்கள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்கிறார்கள். அத்துடன் விவேகானந்த கேந்திரத்தின் அனைத்து மாநில அணிகளும் அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள் மற்றும் முதல்-அமைச்சர்களை சந்திக்க உள்ளனர்.
கையேடு
அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டு (2020) செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும். இந்த ஓராண்டு காலத்தில் விவேகானந்தர் நினைவு மண்டப வரலாறு, உருவான விதம் உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் அச்சிடப்பட்ட கையேடு முக்கிய சுற்றுலா பகுதிகளில் இலவசமாக வழங்கப்படும். மேலும், விவேகானந்த கேந்திர குழுவினர் விவேகானந்தரின் உபதேசங்களுடன் பொதுமக்களை சந்திக்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சியில், அகில இந்திய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஹர்த்திக், விவேகானந்த கேந்திர ஆயுட்கால ஊழியர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story