செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்: வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேச்சு


செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்: வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 1 Sept 2019 3:00 AM IST (Updated: 1 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறினார்.

செங்கம், 

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த ஒரவந்தவாடி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் வரவேற்றார். முகாமில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் சிலர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் பரிசு பெட்டகத்தை வழங்கி பேசுகையில், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது செய்யாறு பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் செய்யாறை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்போது செய்யாறை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும்’ என்றார்.

இதில் மருத்துவர்கள் பிரதீபா, தினேஷ், ஹரிணி, அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எல்.என்.துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர் எல்.புருஷோத்தமன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏ.கே.மூர்த்தி, குப்பன், துரைசாமி, நடராஜ், செங்கம் நிலவள வங்கி தலைவர் வேலு மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story