மாவட்ட செய்திகள்

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் + "||" + DMK Bharathidasan Poetry Recognition Contest on behalf of literary team Sureshrajan MLA Beginning

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இதனை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் கவிதை ஒப்புவித்தல் போட்டி நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. காலையில் நடந்த தொடக்க விழாவுக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஆல்ட்ரின் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் ரெத்தினசாமி, ராஜசேகர் மற்றும் ரமேஷ்மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இரா.பெர்னார்டு, எப்.எம்.ராஜரெத்தினம், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கவிதை ஒப்புவித்தல் போட்டியை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பசலியான், சிவராஜ், சற்குரு கண்ணன், மதியழகன், எம்.ஜே.ராஜன், வள்ளுவன், மணிமாறன், ஜெசிந்தா, டேவிட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கிய அணி மாவட்ட பொருளாளர் ராம்சன் நன்றி கூறினார்.

மாணவ- மாணவிகள்

பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பாரதிதாசன் கவிதைகளை ஒப்புவித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், ஆறுதல் பரிசாக 3 பேருக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

முதலிடம் பெறும் மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம், ஆறுதல் பரிசாக 3 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் என வழங்கப்படுகிறது. இந்த பரிசுகள் வருகிற 15-ந் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவின்போது வழங்கப்படும் என்று இலக்கிய அணி நிர்வாகிகள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில், மகளிர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கரூரில், மகளிர் தினத்தை யொட்டி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
2. சேலத்தில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி
சேலம் கல்வி மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
3. மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி 7-ந் தேதி நடக்கிறது
மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
4. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பரிசு வழங்கினார்.
5. சேலத்தில் மண்டல விளையாட்டு போட்டி 270 மாணவர்கள் பங்கேற்பு
சேலத்தில் நடந்த மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் 270 மாணவர்கள் பங்கேற்றனர்.