ஓசூரில் குப்பைகளுக்கு பணம் வழங்கும் முறை - கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


ஓசூரில் குப்பைகளுக்கு பணம் வழங்கும் முறை - கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Sept 2019 4:15 AM IST (Updated: 1 Sept 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் குப்பைகளுக்கு பணம் வழங்கும் முறையை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி சார்பில், வீடுகள் மற்றும் கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு பணம் வழங்கும் முறையை, கலெக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார். ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள நகராட்சி தெலுங்கு மற்றும் உருது நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த புதிய முறையை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

ஓசூர் நகராட்சி சார்பில் திருச்சி டிராஸ் அண்டு கே‌‌ஷ் என்ற செயலி மூலம் வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவு குப்பைகளை சேகரித்துள்ளவர்களிடம் பணம் கொடுத்து குப்பைகளை வாங்கி செல்லும் முறை ஓசூரில் தொடங்கப்பட்டுள்ளது. ஓசூர் நகராட்சியுடன் இணைந்து, திருச்சியை சேர்ந்த பிளே ஸ்டோர் மூலம் ‘‘டிராஸ் அண்டு கே‌‌ஷ் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் வீடுகள் அல்லது கடைகளில் உள்ள குப்பைகளை ஈரம் இல்லாமல் வழங்க வேண்டும். மேற்கண்ட இந்த செயலியை கிளிக் செய்தால் வீடு தேடி வந்து குப்பைகளை பணம் கொடுத்து வாங்கி செல்வார்கள்.

மேலும், உணவு, காய்கறிகள், உணவு இறைச்சி மற்றும் அழுகக்கூடிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களான குப்பைகள், காகிதங்கள், போன்றவற்றை வாங்கி செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஓசூர் பகுதி மக்கள் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை ஈரம் படாமல் தரம் பிரித்து குப்பைகளை கொடுத்து பணம் பெறும் முறையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஓசூர் நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், திருச்சி டிராஸ் அண்டு கே‌‌ஷ் அமைப்பின் நிர்வாகிகள், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story