காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய மாணவர்கள் 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே கஞ்சா கடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மற்றும் அதை சுற்றி உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதாகவும், அந்த கஞ்சா பொட்டலங்கள் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து காஞ்சீபுரம் போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை திருப்பதியில் இருந்து காஞ்சீபுரத்திற்கு வந்த பஸ்சில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பதாக இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக அவர் போலீசாருடன் காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது 2 பேர் போலீசாரை பார்த்ததும் மிரள, மிரள விழித்தனர். உடனடியாக அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் இருவரையும் காஞ்சீபுரம் அருகே உள்ள வெள்ளை கேட்டில் உள்ள போதை தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரவீன் (வயது 21), ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேரந்த சாய்ராம் (21) என்பதும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
இவர்கள் கடந்த 5 மாதங்களாக கஞ்சா பொட்டலங்களை கடத்திவந்து சக மாணவர்களுக்கு கஞ்சா கொடுப்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் கஞ்சாவை புகைக்க பயன்பத்தும் உபகரணத்தை போலீசார் கைப்பற்றினர்
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story