சாவிலும் இணைபிரியாத தம்பதி; மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு


சாவிலும் இணைபிரியாத தம்பதி; மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு
x
தினத்தந்தி 1 Sept 2019 3:45 AM IST (Updated: 1 Sept 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் இறந்தார்.

கச்சிராயப்பாளையம்,

சாவிலும் இணைபிரியாத இத்தம்பதி பற்றிய விவரம் வருமாறு:-

கச்சிராயபாளையம் அருகேயுள்ள வடக்கநந்தல் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 80), விவசாயி. இவரது மனைவி அஞ்சலையம்மாள்(75) இவர் உடல்நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இறந்தார். மனைவி இறந்ததால். அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து யாரிடமும் பேசாமல் மிகவும் சோகமாக இருந்தார். சிறிதுநேரத்தில் அவரும் இறந்து விட்டார்.மனைவி இறந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே கணவரும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது இதுபற்றி அவர்களின் உறவினர் ஒருவர் கூறுகையில், மாரிமுத்துவுக்கும், அஞ்சலையம்மாளுக்கும் திருமணமாகி 45 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மனைவி ஊருக்கு செல்வதாக இருந்தாலும் கணவரும் கூடவே செல்வார். கணவன்-மனைவி இருவரும் பிரிந்து இருந்ததே இல்லை எங்கு சென்றாலும் ஒன்றாகவே தான் செல்வார்கள். வாழ்விலும், சாவிலும் இணைபிரியா தம்பதியராய் வாழ்ந்து விட்டனர் என்றார்.

இத்தம்பதிக்கு ஆறுமுகம், அண்ணாதுரை என்ற 2 மகன்களும், வளர்மதி, சின்னப்பொண்ணு என்ற 2 மகள் களும் உள்ளனர்.

Next Story