பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு, அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு
பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா உத்தவிட்டார்.
பழனி,
தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான அபூர்வ வர்மா நேற்று காலை 9 மணி அளவில் தனது மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் வந்தார். கோவில் அலுவலர்கள் அவர்களை வரவேற்றனர். பின்னர் அவர்கள் மின்இழுவை ரெயில் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு தனது மனைவியுடன் அபூர்வ வர்மா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அன்னதான கூடம், பிரசாத விற்பனை நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
பின்னர் அடிவாரத்துக்கு வந்து 2-வது ரோப்கார் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது 2-வது ரோப்கார் அமைவது குறித்த பணி விவரங்களை கோவில் பொறியாளர்கள் எடுத்துரைத்த னர். பின்னர் அவர் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர் அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி நிலையத்துக்கு சென்ற அவர் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பொறியாளர் நாச்சிமுத்து உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு, தனது மனைவியுடன் அவர் கொடைக்கானலுக்கு காரில் சென்றார்.
Related Tags :
Next Story