மொபைல்போன் மூலம் வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் புதிய செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட விவரங்களை வாக்காளர்கள் தங்கள் மொபைல்போன் மூலம் சரிபார்க்கும் புதிய செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
காரைக்கால்,
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை வாக்காளர்கள் தங்களது மொபைல் போனை பயன்படுத்தி சரிபார்க்க வசதியாக புதிய செயலியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
வாக்காளர்கள் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை மொபைல்போன் மூலம் சரிபார்க்க வசதியாக புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை இந்த செயலியை பயன்படுத்தி வாக்காளர்கள் பட்டியலில் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து அதில் திருத்தம் செய்து கொள்ளலாம். அந்த விவரங்களை அந்தந்த பகுதிக்குரிய அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று தங்களது செல்பேசி செயலி மூலம் சரிபார்ப்பு பணியை மேற்கொள்வார்கள். இந்த பணி அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி நிறைவுபெற்றுவிடும்.
பின்னர் தேர்தல் துறையினர் இதனை சரிபார்த்து உறுதி செய்வார்கள். முதல் கட்டமாக, அதிகாரிகள் தங்களது விவரங்களை சரிபார்த்து கொள்வார்கள். அதுபோல அரசியல் கட்சியினரும் தங்களது பெயர், தங்களது குடும்பத்தினர் விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தங்களது பகுதி வாக்காளர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
வாக்குச்சாவடியில் நடைபெற உள்ள வாக்காளர் திருத்தப்பணிக்கான முன்னேற்பாடுகள்தான் இவை. இப்பணியில் அனைவரும் கவனம் செலுத்தி தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டுகிறோம் என்றார்.
இந்த கூட்டத்தில் வாக்காளர் பதிவு அதிகாரிகள் ரேவதி பொய்யாத மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story