விருகம்பாக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: தனது தந்தை சந்தோசமாக இருக்கட்டும் என உருக்கமான கடிதம்
விருகம்பாக்கத்தில், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தனது தந்தை சந்தோசமாக இருக்கட்டும். அவரை தொந்தரவு செய்யவேண்டாம் என கடிதம் எழுதி வைத்து உள்ளார்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், மசூதி தோட்டம், 2-வது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர், சினிமாத்துறையில் வேலை செய்பவர்களுக்கு உணவு பரிமாறும் வேலை செய்து வந்தார். இவருடைய மகன் முத்துக்குமார்(28).
சண்முகத்தின் மனைவி இறந்துவிட்டதால் தந்தையும், மகனும் மட்டும் இந்த வீட்டில் வசித்து வந்தனர். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது இல்லை என தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு நீண்டநேரம் ஆகியும் அவரது அறையில் இருந்து முத்துக்குமார் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சண்முகம், கதவை திறந்து பார்த்தபோது, தனது மகன் முத்துக்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த விருகம்பாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் தற்கொலைக்கு முன்பாக முத்துக்குமார் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை சந்தோசமாக இருக்கவேண்டும். அவரை தொந்தரவு செய்யவேண்டாம்” என எழுதி இருந்ததாக போ லீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் வழக் குப்பதிவு செய்து முத்துக்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story