தஞ்சையில் முன்பதிவு ரெயில் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை 3 பேர் கைது
தஞ்சையில் முன்பதிவு ரெயில் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ரெயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்பதிவுக்கு ஐ.ஆர்.டி.யூ.சி. இணையதளத்தில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். அப்படி கணக்கு வைத்திருக்கும் ஒருவர், மாதத்திற்கு 6 டிக்கெட் வரை மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுக்க பிரவுசிங் சென்டர், டிராவல்ஸ் ஏஜென்சி மற்றும் கம்ப்யூட்டர் சென்டர்கள் பல இடங்களில் உள்ளன.
இத்தகைய சென்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், பலர் போலி கணக்கு உருவாக்கி டிக்கெட் எடுத்து அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நாடு முழுவதும் தண்டர் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சென்டர், டிராவல்ஸ் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
3 பேர் கைது
தஞ்சை, கும்பகோணம் உள்பட மாவட்டம் முழுவதும் திருச்சி மண்டல கமிஷனர் மொய்தீன், தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கும்பகோணத்தில் 2 தனியார் டிராவல்ஸ் நிறுவனங்களிலும், தஞ்சையில் ஒரு பிரவுசிங் சென்டரிலும் ரெயில்வே முன்பதிவு டிக்கெட் பதிவு செய்யும் இணையதளத்தில் பல்வேறு கணக்குகள் முறைகேடாக உருவாக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தஞ்சை தொல்காப்பியர் நகரை சேர்ந்த இன்பென்ட் சகாயசிங்(வயது33), கும்பகோணத்தை சேர்ந்த முகமதுகாலித்(27), சகாப்புதீன்(48) ஆகிய 3 பேர் மீது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 3 கம்ப்யூட்டர், பிரிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Related Tags :
Next Story