பேரளத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அமைச்சர் காமராஜ் பங்கேற்பு


பேரளத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Sep 2019 11:00 PM GMT (Updated: 1 Sep 2019 6:43 PM GMT)

பேரளத்தில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொணடார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுகிற அரசு ஜெயலலிதாவின் அரசு. மக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கேட்டு தீர்வு செய்ய முதல்-அமைச்சர் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

ஒரு மாத காலத்திற்குள் தீர்வு

இந்த கூட்டத்தில் முதியோர் ஓய்வூதிய தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, விலையில்லா வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் முருகதாஸ், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜெயதீபன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் அன்பு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம.குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story