பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்


பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:15 AM IST (Updated: 2 Sept 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையத்தை மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தினை நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையம் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி 2020-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள அறிவித்துள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் மற்றும் தகுதியுள்ள நபர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்துடனும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டத்தை வருகிற 30-ந் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் செயல் படுத்துகிறது.

சரிபார்த்து கொள்ளலாம்

மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர்களே மேற்கொள்ளும் புதிய திட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக, வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி, ஆகிய விவரங்களை வாக்காளர்களே திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை செல்போன் செயலி ( Vot-er he-lp li-ne Mo-b-i-le App ) , தேசிய வாக்காளர் இணையதள சேவை ( NV-SP.in ) , வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் உதவி மையம், பொது சேவை மையங்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் தங்களது தகவல்களை சரிபார்த்து கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் மட்டும் தங்கள் தேவை குறித்து, வாக்காளர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1950-ஐ தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம் என்றார்.

இதில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, தாசில்தார் பாரதிவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story