பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழக வாலிபர்


பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழக வாலிபர்
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழக வாலிபர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள அண்ணகாரன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் வேல்முருகன்(வயது 31). ஐ.டி.ஐ. படித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இதேபோல் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் பிரியா (என்கிற) ரோனாஜென்(24). ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்த இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது பெற்றோரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை தா.பழூரில் உள்ள அனுமார் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஊர்முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Next Story