திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 34 ஆயிரத்து 274 பேர் எழுதினர் - கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 34 ஆயிரத்து 274 பேர் எழுதினர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:30 AM IST (Updated: 2 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 34 ஆயிரத்து 274 பேர் எழுதினர் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாார் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடத்தப்படும் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. திருவள்ளுர் ஜே.என் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளுர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவள்ளுர், ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 135 மையங்களில் நடந்தது.

திருவள்ளுர் மாவட்டத்தில் மொத்தம் 41 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 34 ஆயிரத்து 274 பேர் தேர்வு எழுதினர். இந்த ஆய்வின்போது திருவள்ளுர் தாசில்தார் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story