நெற்கட்டும்செவலில் பிறந்தநாள் விழா: பூலித்தேவன் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை


நெற்கட்டும்செவலில் பிறந்தநாள் விழா: பூலித்தேவன் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

வாசுதேவநல்லூர்,

நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் மாளிகை உள்ளது. அங்கு நேற்று அவரது 304-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கடம்பூர்ராஜூ, செல்லூர் ராஜூ, ராஜலட்சுமி, பாஸ்கரன் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் மனோஜ்பாண்டியன், சுதாபரமசிவன், எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலாசத்யானந்த், எம்.எல். ஏ.க்கள் மனோகரன், செல்வமோகன்தாஸ் பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா (நெல்லை மாநகர்), கே.ஆர்.பி.பிரபாகரன் (நெல்லை புறநகர்), இளைஞர் அணி செயலாளர் அரிகரசிவசங்கர், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார் (நாங்குநேரி), முத்தையா பாண்டியன் (வாசுதேவநல்லூர்), கருத்தபாண்டியன் (சேரன்மாதேவி), பாசறை ஒன்றிய செயலாளர் சீமான் மணிகண்டன், சிறுபான்மை பிரிவு மாவட்ட இணை செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், புறநகர் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் முருகேசன், மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சங்க துணை தலைவர் ஜெபராஜ் உள்பட பலர் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக சங்கரன்கோவிலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story