நாமக்கல் பஸ்நிலையத்தில் லாரி அதிபரிடம் ரூ.6¾ லட்சம் கொள்ளை


நாமக்கல் பஸ்நிலையத்தில் லாரி அதிபரிடம் ரூ.6¾ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 2 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் பஸ்நிலையத்தில் திருச்சியை சேர்ந்த லாரி அதிபரிடம் ரூ.6¾ லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல், 

திருச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 54). லாரி அதிபர். இவர் தனது மகளின் திருமண செலவுக்காக நாமக்கல்லில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.6¾ லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு ஆட்டோவில் நாமக்கல் பஸ்நிலையம் வந்தார். இங்கிருந்து திருச்சி செல்லும் தனியார் பஸ் ஒன்றில் ஏறினார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி யாரோ முருகன் பணத்தை வைத்து இருந்த பையை கொள்ளை அடித்து சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் சத்தம் போட்டு உள்ளார்.

ஆனால் ரூ.6¾ லட்சத்தை கொள்ளை அடித்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து முருகன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல் பஸ்நிலையத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story