விநாயகர் சதுர்த்தி அன்றும் விசாரணைக்கு அழைத்து டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் பழிவாங்குகின்றனர் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு
விநாயகர் சதுர்த்தி அன்றும் விசாரணைக்கு அழைத்து டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பழிவாங்குகின்றனர் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லியில் உள்ள வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டி.கே.சிவக்குமாரிடம் கடந்த 2 நாட்களாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், ரூ.8.50 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடவிடாமல் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையினர் நெருக்கடி கொடுப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். மேலும் விநாயகர் சதுர்த்தி அன்றும் டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறையினருக்கு எதிராக நேற்று ராமநகர், பெலகாவியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கூறி இருப்ப தாவது;-
இந்துகள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடிவு செய்து, அன்றைய தினம் விசாரணை நடத்த வேண்டாம் என்று அமலாக்கத்துறையினரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் டி.கே.சிவக்குமாரின் கோரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை அன்றும் விசாரணை என்ற பெயரில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் பழிவாங்குகின்றனர். இது பழிவாங்கும் நடவடிக்கை அல்லாமல், வேறு என்ன?. இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story