சதுரகிரி மலையில் ரோப்கார் அமைக்க வலியுறுத்தல்


சதுரகிரி மலையில் ரோப்கார் அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Sept 2019 4:00 AM IST (Updated: 2 Sept 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என்று அன்னதானம் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் பக்தர்கள் அன்னதான சங்கங்கள் கூட்டமைப்பு கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது.

கூட்டத்தில் மம்சாபுரம் அனைத்து சமுதாய மக்கள் உரிமை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் ஆனந்த வித்யாலயா பள்ளியின் தாளாளர் ஆனந்த குமார், ஓய்வுபெற்ற தாசில்தார் செல்லச்சாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி, ஓய்வு பெற்ற மேஜர் பொன்னுசாமி, விருதுநகரை சேர்ந்த ஜனார்த்தனன்,

இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட துணைத் தலைவர் முருகேச ராஜா, குமரேசன், பாலசுப்பிரமணி, மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் அன்னதானம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்து சிறப்பாக வழிபட்டு வந்தனர். தற்போது வனத்துறையினரால் இந்த செயல்பாடுகள் தடைபட்டு பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே வனத்துறையினர் சட்டதிட்டங்களை தளர்த்தி பக்தர்களுக்கு ஆதரவு தர வேண்டும். என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே நடைபெற்று வந்த 14 அன்னதான மடங்களும் அன்னதான பணியைச் செய்ய அரசை கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சிரமம் இன்றி செல்ல மாவுத்து என்ற இடத்திலிருந்து மலைக்கு செல்ல ரோப் கார் அமைத்து கொடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

Next Story