மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க ரூ.5¼ கோடி உதவித்தொகை - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டில் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க ரூ.5¼ கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019-ம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை பராமரிப்பதற்காக ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் நபர்களுக்கு மொத்தம் ரூ.5 கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
கல்வி பயிலும் 124 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 லட்சத்து 57 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. கால் ஊனமுற்ற 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 28 ஆயிரத்து 960 மதிப்பிலான இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக 7 பேருக்கு மொத்தம் ரூ.3½ லட்சம் மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல் காதொலிகருவி, சக்கரநாற்காலி, நவீன அதிரும் மடக்கு ஊன்று கோல்கள், கண்பார்வை பாதிக்கப்பட்ட மாற்்்றுத்திறனாளிகள் படிப்பதற்காக எழுத்துக்களை பெரிதாக்கி காண்பிக்கும் மேக்்்்்்்்்்்்்னிபயர் உள்பட 120 மாற்றுத்திறனாளிளுக்கு ரூ.2½ லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவை தவிர தொண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புபள்ளி, மனநலகாப்பகம் மற்றும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் ஆகியவற்றில் 280 மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பதற்காக ரூ.64 லட்சத்து 52 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 135 பேருக்கு ரூ.56 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக தொழில் செய்து வாழ்வில் முன்்னேற வங்கி கடன் மானியமாக 57 மாற்றுத்்்்்்்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 989 வழங்கப்பட்டு உள்ளது.
தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்்காலி வழங்கப்படுகிறது. அந்த வகையில் மின்கலத்தின் உதவியுடன் கைப்பிடியில் உள்ள விசையின் மூலம் இயங்கும் வகையிலான மோட்டார் பொருத்தப்பட்ட அதிநவீன சக்கர நாற்காலிகள் 50 நபர்களுக்கு ரூ.37 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story