புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நாகையில் நடந்தது
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். மாவட்ட மாநாடு வரவேற்பு குழு தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் அன்பழகன், வட்ட செயலாளர் தமிழ்வாணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், அரசு செவிலியர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தர்ராஜன் கலந்துகொண்டு பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழு நிலுவைகளை உடன் வழங்க வேண்டும். சத்துணவு, ஊட்டச்சத்து, வருவாய்த்துறை கிராம உதவியாளர் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கும் ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களை மறு நியமனம் செய்வதை தடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13-வது மாநில மாநாடு வருகிற 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தஞ்சையிலும், வருகிற 14 மற்றும் 15-ந் தேதிகளில் நாகையில் நடைபெறும் மாநாட்டில் அனைவரும் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மணி, ஓய்வூதியர் சங்க தலைவர்கள் ஆசைத்தம்பி, குண சேகரன் உள்பட பல்வேறு சங்க தலைவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story