மாவட்ட செய்திகள்

தண்டையார்பேட்டையில் வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது + "||" + Seven persons arrested with knife for wait try to murdering youth

தண்டையார்பேட்டையில் வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது

தண்டையார்பேட்டையில் வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது
தண்டையார்பேட்டையில், வாலிபர் ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் ரவுடிகள் கத்திகளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பதுங்கி இருப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


அப்போது மேம்பாலத்தின் கீழே கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான சந்தோஷ் (வயது 29), பாஸ்கர் (23) மற்றும் அவர்களது கூட்டாளிகளான சுரேஷ் (29), நாகராஜ் (20), சரவணன்(25), விக்கி(24), ஸ்ரீதர்(20) என்பது தெரிந்தது. 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள், அந்த பகுதியில் மாமுல் வசூல் செய்யவும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரிந்தது. கைதான 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மூலனூர் அருகே சம்பவம்: புதுப்பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது
புதுப்பெண்ணை கொன்று உடலை அமராவதி ஆற்றின் கரையோரம் வீசிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவருடன் தொடர்பு வைத்து இருந்ததால் கொன்றதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. கார் மீது பெட்ரோல் குண்டு வீசி டிரைவர் கொலை: தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் சாவு மேலும் 2 பேர் கைது
கார் மீது லாரியை மோத விட்டு பெட்ரோல் குண்டு வீசி டிரைவரை கொலை செய்த சம்பவத்தில் தீக்காயம் அடைந்த தொழில் அதிபர் மனைவியும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. ஆத்தூரில் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் கைது
ஆத்தூரில் கள்ள நோட்டை மாற்ற முயன் றவரை போலீசார் கைது செய்தனர்.
4. குடிபோதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது டீக்கடை தொழிலாளியை கொன்ற நண்பர் கைது
அருப்புக்கோட்டையில் மதுரை பேரையூரை சேர்ந்த டீக்கடை தொழிலாளியை வெட்டிக்கொன்ற அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
5. மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக - பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது
கோவையில் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் உணர்வை தூண்டியதாக பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-