ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வறண்டு கிடக்கும் ‘மினி குற்றால அருவி’


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வறண்டு கிடக்கும் ‘மினி குற்றால அருவி’
x
தினத்தந்தி 3 Sep 2019 10:30 PM GMT (Updated: 3 Sep 2019 6:56 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மினி குற்றாலம் அருவி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான சிறு அருவிகள் நீரோடைகள் உள்ளன.

அதில் குறிப்பிடத்தக்க அருவியாக மினி குற்றால அருவி உள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் இருக்கும்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த மினி குற்றால அருவியிலும் தண்ணீர் அதிக அளவு கொட்டுவது வழக்கம்.

இதனால் இந்த அருவியை மினி குற்றால அருவி என இந்த பகுதியை சேர்ந்தவர்கள் அழைப்பார்கள். ஆனால் தற்போது குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் கொட்டும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மினி குற்றால அருவி காய்ந்து வறண்டு கிடக்கிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ்மக்கள் கூறும்போது, குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து அருவிகளிலும் ஓடைகளிலும் தண்ணீர் வரும். ஆனால் இந்த முறை குற்றாலத்தில் பலத்த மழை பெய்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வரும் நிலையில் இங்கு மழையின்றி வறண்டு போய் அருவியில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் வழக்கமாக இந்த பகுதிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் இந்த முறை வரவே இல்லை என கவலையுடன் தெரிவித்தனர்.

Next Story