அரசு செட்டாப் பாக்ஸ் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை - கலெக்டர் ராஜசேகர் எச்சரிக்கை
அரசு செட்டாப் பாக்ஸ் செயல்படுத்தாத ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராஜசேகர் எச்சரித்துள்ளார்.
மதுரை,
மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு மூலம் மட்டுமே டி.வி. சேனல்களை ஒளிபரப்ப உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பழைய முறையிலான அனலாக் முறை ஒளிபரப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மத்திய அரசிடம் இருந்து டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்று கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கி வருகிறது.
மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய விதிமுறைகளின் படி அனலாக் முறையில் ஒளிபரப்புவது சட்ட விரோதம் ஆகும். எனவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உடனடியாக அனலாக் முறையில் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த வேண்டும். டிஜிட்டல் முறையில் மட்டுமே ஒளிபரப்பு செய்ய வேண்டும். மீறினால் ஆபரேட்டர்களின் ஒளிபரப்பு உபகரணங்கள் பறிமுதல் செய்து அவர்களது உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.
தற்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மாத கட்டணத்தொகையாக அனைத்து வரிகள் உள்பட ரூ.154 என நிர்ணயம் செய்து, அதில் 140 இலவச சேனல்கள், 57 கட்டண சேனல்கள் என மொத்தம் 197 சேனல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் இணைப்பு கோரும் பொதுமக்களுக்கு ஆபரேட்டர்கள் தடையின்றி இணைப்பு வழங்க வேண்டும்.
அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக் கொண்டு சில ஆபரேட்டர்கள் அதனை செயலாக்கம் செய்யாமல் தனியார் நிறுவனங்களிடம் இருந்து செட்டாப் பாக்ஸ்களை பெற்று ஒளிபரப்பு செய்து வருகின்றனர். அவர்கள் உடனடியாக அரசு செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அரசால் வழங்கப்பட்ட விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதனை ஆபரேட்டர்கள் மூலம் செயலாக்கம் செய்ய வேண்டும். மேலும் தாங்கள் குடியிருப்பு வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு செல்லும் போதோ அல்லது டி.டி.எச். இணைப்பிற்கு மாறினாலோ தாங்கள் பெற்ற அரசு செட்டாப் பாக்சினை ஆபரேட்டரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story