மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே, கொலையுண்ட தொழிலாளியின் உறவினர்கள் மறியல் + "||" + Near Tirupathur The killing of worker Relatives Stir

திருப்பத்தூர் அருகே, கொலையுண்ட தொழிலாளியின் உறவினர்கள் மறியல்

திருப்பத்தூர் அருகே, கொலையுண்ட தொழிலாளியின் உறவினர்கள் மறியல்
திருப்பத்தூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர், 

திருப்பத்தூரில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் கோபால். அவருடைய மகன் குமரேசன் (வயது 35), சுமை தூக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி ஷீலா. இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். குமரேசனும், சக தொழிலாளி ஒருவரும் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு, கூலி பணத்தை பங்கு பிரித்து கொண்டிருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வேலு மகன் சூர்யாவுக்கும் (20), குமரேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குமரேசன், சூர்யாவை கையால் தாக்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யா வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து, குமரேசனின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று சூர்யாவை கைது செய்யக்கோரி குமரேசனின் குடும்பத்தினர், உறவினர்கள் திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் கலைஞர் நகர் என்ற இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனலோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, சூர்யாவை கைது செய்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவுவது யாரால் என்பதில் தகராறு: ஊட்டியில் தொழிலாளி குத்திக்கொலை - போண்டா மாஸ்டர் கைது
ஊட்டியில் கொரோனா பரவுவது யாரால் என்கிற தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய் தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. 4 வழிச்சாலை அமைக்கும் பணி: புழுதி பறப்பதை கண்டித்து கிராம மக்கள் மறியல்
திண்டுக்கல் அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணியின்போது புழுதி பறப்பதை கண்டித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
3. கருப்பூர் அருகே சிமெண்டு கல் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்
கருப்பூர் அருகே சிமெண்டு கல் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி பெண் பலியானார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
4. மீன்பிடித்துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியல்
அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருவாடு உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. சாலை பணிக்கு ஜல்லி கற்கள் கொண்டு செல்ல அனுமதி மறுப்பு வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல்
தடிக்காரன்கோணத்தில் சாலை சீரமைப்பு பணிக்கு ஜல்லி கற்கள், பொக்லைன் எந்திரம் கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...