பாளையங்கோட்டையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; எலக்ட்ரீசியன் பலி - மேலும் ஒருவர் படுகாயம்
பாளையங்கோட்டையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளானதில் எலக்ட்ரீசியன் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த சன்னதி புதுக்குடியை சேர்ந்தவர் மாசானமுத்து (வயது 24). எலக்ட்ரீசியன்.
இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டை சமாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளாகின.
இதில் மாசானமுத்துவும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கந்தசாமி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் ரோட்டில் விழுந்து கிடந்தனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மாசானமுத்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்துள்ள கந்தசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story