மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி + "||" + Rain in Erode district - Public happy

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை அந்தியூரில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மதியம் 3 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.


இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், பருவாச்சி, அத்தாணி உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை தூறல் மழை பெய்தது.

அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றவட்டார பகுதிகளான பூதப்பாடி, பூனாச்சி, சித்தார் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 3.15 மணி முதல் 3.45 மணி வரை மழை பெய்தது. பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது. மேலும் கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளிலும் நேற்று மாலை மழை தூறிக்கொண்டே இருந்தது. இதன்காரணமாக குளிர்ந்த காற்று வீசியது

தொடர்புடைய செய்திகள்

1. பாகூர், கிருமாம்பாக்கம், மணவெளியில் கொட்டி தீர்த்த மழை
புதுவையில் உள்ள பாகூர், கிருமாம்பாக்கம், மணவெளி உள்ளிட்ட கிராமப்புறங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மின் தடையால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
2. பலத்த காற்றுடன் மழை:; 20 வீடுகள், பயிர்கள் சேதம்; மின்கம்பங்கள் முறிந்து மின்தடை
திருச்செங்கோடு அருகே, பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு 20 வீடுகள், பயிர்கள் சேதம் அடைந்தன. மின்கம்பங்கள் முறிந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.
3. பலத்த காற்றுடன் திடீர் மழை
புதுச்சேரியில் நேற்று பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்தது.
4. ஈரோட்டில் குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் எரிந்து நாசம்
ஈரோட்டில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துண்டுகள் எரிந்து நாசம் ஆனது.
5. ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பில் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் அ.தி.மு.க. சார்பில் 70 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வினியோகிக்கும் பணியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.