புத்தேரியில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தேர்வில் தோல்வி அடைந்ததால் 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
நாகர்கோவில்,
நாகர்கோவில், புத்தேரியில் தேர்வில் தோல்வி அடைந்ததால் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நாகர்கோவில், வடசேரி புத்தேரியை சேர்ந்தவர் சுபா நந்தினி (வயது 43). இவர் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நாகராஜன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகன் யோகேஷ் என்கிற கோப் சஜித் நாஜி (15). நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் தனது அறைக்கு சென்றான். நீண்ட நேரமாகியும் யோகேஷ் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தாயார் சுபா நந்தினி அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சிறுவன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுபா நந்தினி கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மாத தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த யோகேஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story