வானவில் : விரல்களைக் காக்கும் விரல் காப்பான்
காய்கறிகளை நறுக்கும்போது கத்தி விரலை பதம்பார்க்காமல் இருக்க வந்துள்ளதுதான் விரல் காப்பான்.
சமையல் செய்வது பல சமயங்களில் மிகவும் கடினமானதாகிவிடும். இதற்குக் காரணம் நேரம் போதாமைதான். காலையில் அலுவலகம் கிளம்பும் முன்பு கணவர், குழந்தைகளுக்கு தேவையானவற்றை தயாரித்துவிட்டு கிளம்புவதற்குள் இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.
பொதுவாக காய்கறிகளை நறுக்கும்போது மிகவும் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையெனில் காய்களோடு விரலும் காயம் ஏற்படும். அவசரமான சமயங்களில் காய்கறிகளை நறுக்கும்போது நிச்சயம் கத்தி விரலை பதம்பார்க்கும் நிகழ்வுகள் நடக்கும். அவ்விதம் நடக்காமல் இருக்க வந்துள்ளதுதான் விரல் காப்பான். ஒகேயாஜி என்ற நிறுவனம் ஸ்டீலினால் ஆன குப்பியை வடிவமைத்து தயாரித்துள்ளது.
இதை நடுவிரலில் மாட்டிக் கொண்டு காய்களை நறுக்கும்போது மற்ற விரல்கள் கத்தியின் வெட்டுக் காயத்திலிருந்து தப்பிக்க முடியும். இதன் விலை ரூ.170. விரல்களை பாதுகாக்க இந்த செலவு ஒன்றும் அதிகமில்லை.
Related Tags :
Next Story