வானவில் : ஷார்ப் நிறுவனத்தின் காற்று சுத்திகரிப்பான்


வானவில் : ஷார்ப் நிறுவனத்தின் காற்று சுத்திகரிப்பான்
x

ஷார்ப் நிறுவனம் காற்று சுத்திகரிக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்போதெல்லாம் நகர்பகுதிகளில் சுத்தமான காற்றை விலைகொடுத்துதான் வாங்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இதனால் பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு ஏ.சி., வாஷிங்மெஷின் போன்ற நவீன சாதனங்களோடு காற்று சுத்திகரிப்பானும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு ஜப்பானைச் சேர்ந்த ஷார்ப் நிறுவனம் காற்று சுத்திகரிக்கும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது காற்றில் மாசுக்களை வெளியேற்றுவதோடு, அறையில் அதிகபட்ச ஈரப்பதம் நிலவாமல் தடுத்துவிடும். காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது மாசு அதிகரிக்கும். இதனால் காற்றில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு நிலவ இது உதவும்.

இதில் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்மா கிளஸ்டர் ஐயான் ஜெனரேட்டர் தொழில்நுட்பம் உள்ளது. இது சலவை இயந்திரம் ஈரத் துணியை உலர்த்த பயன்படுத்தும்  தொழில்நுட்பத்தைப் போன்றது. இது அறையில் உள்ள ஈரப்பதத்தை போக்க உதவுகிறது. SHARP DWJ20FMW and DW-E16FAW என்ற பெயரில் இது அறிமுகமாகி உள்ளது. குழந்தைகள் எளிதில் கையாள முடியாத வகையில் இதில் சைல்ட்லாக் வசதி உள்ளது.

அத்துடன் அதிக அளவு குப்பை சேர்ந்துவிட்டால் அதை உணர்த்தி நீக்க வலியுறுத்தும் விளக்கு எரியும். கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிப்போர் (ஈரப்பதம் அதிகமிருக்கும்), கடற்கரையோர விடுதிகளில் இதை  பயன்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.40 ஆயிரமாகும். ஓராண்டு உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது.

Next Story